Followers

Thursday 29 September, 2011

வாருங்கள் கற்கலாம் - டேலி.இ ஆர் பி 9 மென்பொருள்.-பாடம் -2

MyFreeCopyright.com Registered & Protected

COMPANY CREATION
டேலி ERP9 மென்பொருள் தற்போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளது அல்லவா?
உங்கள் DESKTOP -ல் உள்ள டேலி ஐகானை இருமுறை சுட்டுக.
உங்கள் திரையில் டேலி இயங்கி பின்வருமாறு தோன்றும்.
மேலே உள்ள Work in Educational Mode-ல் நுழைந்து Silver Edition Mode (Single User) -ஐ தெரிவு செய்க. தற்போது டேலியின் திரை பின்வருமாறு தோன்றும்.
டேலியின் COMPANY CREATION பகுதிக்கு செல்லுமுன் , டேலி -SCREEN STRUCTURE பற்றி அறிவோம்.


PRODUCT WINDOW
டேலி மென்பொருள் பற்றிய தகவல்களை அளிக்கும் பகுதி இது.

மேலே உள்ள பகுதியை சுட்டினால் அது உங்களை டேலி மென்பொருள் வலைதளத்திற்கு (www.tallysolutions.com)  அழைத்துச் செல்லும். 

மேலே உள்ள VERSION - பகுதியின் மூலம் கீழ்கண்டவற்றை அறியலாம். 

RELEASE
டேலி மென்பொருள் நிறுவனம் ,அவ்வப்பொழுது புதிய மாற்றங்களின் மூலம் தனது மென்பொருளை மேம்படுத்துகிறது.அத்தகைய மாற்றங்கள் புதிய RELEASE - ஆக வெளிவருகின்றன.
உதாரணம்.  Tally.ERP 9 Release 1.1,Tally.ERP 9 Release 1.3,Tally.ERP 9 Release 1.51,Tally.ERP 9 Release 2
இத்தகைய RELEASE -கள் கண்டிப்பாக ஒன்றிலிருந்து ஒன்று சிறிய அளவில் மாறுபட்டிருக்கும்.
நீங்கள் தற்போது எந்த RELEASE -ல் இருக்கிறீர்கள் என்பதை இப்பகுதியில் அறியலாம்.
LATEST
டேலி மென்பொருள் நிறுவனம் கடைசியாக வெளியிட்டுள்ள RELEASE என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் ,உங்கள் RELEASE -ஐ மேம்படுத்தாமல் பின் தங்கியிருந்தால் ,புதிய RELEASE -பற்றி அறிய இப்பகுதி ஏதுவாக இருக்கும்.
EDITION
டேலி மென்பொருளில் SILVER (SINGLE USER),GOLD (MULTI USER) என இரு வகைகள் உள்ளன.
SILVER (SINGLE USER)
ஒரு சமயத்தில் ,ஒரே ஒரு கணினியில் மட்டுமே பயன்படுத்த இயலும்.
GOLD (MULTI USER)
ஒரு அலுவலகத்தில் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளில் (WITH IN ONE LOCALAREA NETWORK ) பயன்படுத்தலாம்.
உங்களின் மென்பொருள் எந்த வகையை சேர்ந்தது என அறிய இப்பகுதி பயன் தரும்.
LICENSE
டேலி மென்பொருளில் மாதிரி மென்பொருள் ( EDUCATIONAL/DEMO VERSION) மற்றும் முழு மென்பொருள் (ORIGINAL VERSION) என இரு வகைகள் உள்ளன.
EDUCATIONAL/DEMO VERSION
தேதி தடை செய்யப்பட்ட மாதிரி மென்பொருள்.இதில் 1 ,2 மற்றும் 31 ஆகிய தேதிகள் மட்டுமே பயன்படுத்த இயலும்.இது மாணவர்கள் பயிற்சி பெற உதவும்.
ORIGINAL VERSION
அனைத்து தேதிகளும் தடையின்றி பயன்படுத்தலாம்.இதை பணம் செலுத்தி வாங்க 
வேண்டும்.


CONFIGURATION
STAT:
அரசாங்கத்தின் வரி சம்பந்தமான மாறுதல்கள் ,டேலி மென்பொருளில் புதுப்பித்துக்கொள்ள இது ப்யன்படுகிறது.நீங்கள் தற்போது எந்த STAT -ல் இருக்கிறீர்கள் என்பதை இப்பகுதியில் அறியலாம்.
டேலி மென்பொருள் நிறுவனம் கடைசியாக வெளியிட்டுள்ள STAT என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
TDL:
டேலி உருவாக்க மொழி (TDL) மூலம் செய்யப்பட்ட CUSTOMIZATION ஏதேனும் இணைக்கப்பட்டுள்ளதா என இங்கே அறியலாம்.
CALCULATOR


கால்குலேட்டர் பகுதிக்குள் செல்ல Ctrl + N -ஐ அழுத்தலாம்.உங்களுக்கு தேவையான கணக்குகளை செய்யலாம்.கணக்குகளை சரிபார்க்கலாம்.Ctrl + M / Esc  ஐ அழுத்தி கால்குலேட்டர் பகுதியில் இருந்து வெளியேறலாம்.
AUTO VALUE CALCULATOR
இது மற்றோர் வகை கால்குலேட்டர்.இதனை பற்றி VOUCHER ENTRY -பகுதியில் பார்ப்போம்.
HELP WINDOW

டேலி மென்பொருளின் ஒவ்வொரு திரையிலும் (SCREENS) உங்களுக்கு உதவ அமைக்கப்பட்டிருப்பதே HELP WINDOW.
இது முழுவதும் FUNCTION KEY மூலம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் மூன்று விதமான  FUNCTION KEY உள்ளது.
1.ORDINARY FUNCTION KEY
2.FUNCTION KEY WITH SINGLE UNDERLINE
3.FUNCTION KEY WITH DOUBLE UNDERLINE
இந்த அமைப்பு FUNCTION KEY அல்லாத மற்ற KEY -களுக்கும் பொருந்துவதாக உள்ளது.
உதாரணம்.
INFORMATION WINDOW
NAME OF COMPANY
டேலி மென்பொருளில் CURRENT WORKING COMPANY -எது என இங்கே காணலாம்.
DATE OF LAST ENTRY
COMPANY-யின் கடைசி ENTRY - தேதியை இங்கே அறியலாம்.
CURRENT PERIOD
COMPANY-யின் நிதியாண்டு (FINANCIAL YEAR) -ஐ இங்கே அறியலாம்.
CURRENT DATE
டேலி மென்பொருள் ,தேதியை தானாகவே (SYSTEM DATE) க்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளாது.நாம் தான் தேதியை மாற்ற வேண்டும்.
WORK WINDOW
இந்த WINDOWவை பயன்படுத்துவதின் மூலமாகத்தான், நாம் டேலி மென்பொருள்பயன்படுத்த உள்ளோம்.
 WORK WINDOW- ஐ பயன்படுத்த 3 வழிகள் உள்ளன.
1.HOT KEY METHOD
WORK WINDOW-வின் ஒவ்வொரு MENU -விலும் ஒரு HIGH LIGHTED CHARACTER -இருக்கும்.
அதை அழுத்துவதின் மூலம் டேலி மென்பொருளை எளிதாக இயக்கலாம்.
உதாரணம்.
Accounts Info -இதில் A என்பது HOT KEY .இதை அழுத்துவதின் இந்த MENU-வை இயக்கலாம். இதை போன்றே அனைத்து MENU -களிலும் HOT KEY அமைந்துள்ளது.
2.USING ARROW AND ENTER KEY METHOD
UP/DOWN ARROW -க்களை பயன்படுத்தி தேவையான MENU-வை HIGHLIGHT செய்து பின் ENTER KEY -அழுத்தி இயக்கலாம்.
3.USING MOUSE
தேவையான MENU -வின் மீது இருமுறை சுட்டுவதின் மூலம் இந்த MENU-வை இயக்கலாம்.
COMPANY CREATION
இந்த பாடத்தின் முக்கிய பகுதிக்கு வந்துவிட்டோம்.
COMPANY INFO MENU -வில் இருந்து Create Company -தெரிவு செய்க.
தற்போது நீங்கள் COMPANY CREATION MENU -விற்குள் இருப்பீர்கள்.
1.DIRECTORY
பொதுவாக DIRECTORY என்பது ,நாம் உருவாக்க உள்ள COMPANY -ஐ கணினியின் எப்பகுதியில் சேமிக்க இருக்கிறோம் என்பதை குறிப்பதாகும். இயல்பாக டேலி மென்பொருள் எங்கே நிறுவப்பட்டுள்ளதோ ,அப்பகுதியிலேயே COMPANY -யும் சேமிக்கப்படும்.
இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை.ஆனால் உங்கள் COMPANY -ஐ மற்றவர் அறியாவண்ணம் ரகசியமாக வைக்க விரும்பினால் BACKSPACE -KEY அழுத்தி ,இந்த பாதையை மாற்றலாம்.ஆனால் ஒவ்வொரு முறையும் SELECT COMPANY -யின் போதும்
BACKSPACE -KEY அழுத்தி பாதையை மாற்ற வேண்டியது கட்டாயமாகும்.
2.NAME
இங்கே உங்கள் COMPANY  பெயரை டைப் செய்யுங்கள்.டேலி மென்பொருள் அனுமதிக்கும்
நீள அளவு 51 CHARACTERS.
TITLE CASE -என்ற அமைப்பு உள்ளதால் ஒவ்வொரு வார்தையின் முதலெழுத்தும் ,தானாகவே CAPITAL -ஆக மாறும்.
3.MAILING NAME
இது உங்கள் நிறுவனத்தின் PRINT NAME ஆகும்.இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
இங்கே கொடுக்கப்படும் பெயரே எல்லா REPORT PRINTOUT -களில் இடம்பெறும்.
4.ADDRESS
இங்கே உங்கள் COMPANY  விலாசத்தை டைப் செய்யுங்கள்.இது COMPULSORY FIELD இல்லை,எனவே SKIP செய்துவிடமுடியும். இது முக்கியமான FIELD ஆகும்.விலாசத்தை கண்டிப்பாக டைப் செய்யவும்.
5.STATUTORY COMPLIANCE FOR 
6.STATE 
7.PIN/TELEPHONE/MOBILE/MAIL
இவை OPTIONAL FIELD -என்பதால் SKIP செய்ய விரும்பினால் பரவாயில்லை.
8.AUTO BACKUP
TALLY.ERP9 -ன் புதிய பயன்பாடு இது. தானாகவே டேலி மென்பொருள் நிறுவன டேட்டாவை பிரதி எடுத்து வைத்துக்கொள்ளும்.இது அவசர நேரங்களில் பயன்படும்.
9.CURRENCY SYMBOL.
இதுவும் TALLY.ERP9 -ன் புதிய பயன்பாடு.  Rs  -க்கு பதிலாக புதிய CURRENCY SYMBOL தரப்படடுள்ளது. இதற்கான KEY CTRL + 4 ஆகும்.
10.MAINTAIN
உங்கள் நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப ACCOUNTS ONLY /ACCOUNTS WITH INVENTORY -ஐ தெரிவு செய்யலாம்.

11.FINANCIAL YEAR
உங்கள் நிறுவனத்தின் நிதியாண்டு ஆரம்பம் இங்கே தரப்பட வேண்டும்.

12.BOOKS BEGINNING FROM 

உங்கள் நிறுவனம் இந்த ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது எனில் அது 01-04 ஐ தவிர 
வேறு தேதியானால் இங்கே தரப்பட வேண்டும்.இல்லை எனில் நிதியாண்டு ஆரம்பமே இதற்கும் ஆரம்பம்.

13.TALLY VAULT PASSWORD IF ANY & USE SECURITY CONTROL 
இவை இரண்டும் இரு வகையான PASSWORD METHODS. இவற்றை பற்றி வர இருக்கும் பாடங்களில் பார்க்கலாம். எனவே தற்போது இதை SKIP செய்துவிடவும்.
14.BASE CURRENCY INFORMATION.
இந்திய நாட்டுற்கான CURRENCY அமைப்பு ஏற்கனவே சரியாக அமைக்கப்பட்டுள்ளதால் இதில் மாற்றம் செய்ய தேவையில்லை.


மேற்கூறிய அனைதது விவரங்களையும் கொடுததபின் டேலி மென்பொருள் இந்த நிறுவனத்தை பதிவு செய்யலாமா என வினவும்.

இதற்கு ENTER அல்லது Y -Key ஐ அழுத்துவதின் மூலம் நிறுவன உருவாக்கம் நிறைவு பெறும்.                                                                                                                      

Friday 23 September, 2011

வாருங்கள் கற்கலாம் - டேலி.இ ஆர் பி 9 மென்பொருள்.-பாடம் -1

MyFreeCopyright.com Registered & Protected

டேலி மென்பொருள் (TALLY.ERP9 SOFTWARE) பயில்வதற்கு முன் ,
அதனை பற்றி ஓர் அறிமுகம்

டேலி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் - TALLY SOLUTIONS PRIVATE LIMITED
நிறுவனம் அமைந்துள்ள இடம் - BANGALORE
நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1986
மேலாண் இயக்குனர் - Mr.BHARATH GOENKA
டேலி மென்பொருள் உபயோகிக்கும் நாடுகள் -  94 COUNTRIES
டேலி மென்பொருளின் VERSIONS  - Tally ver 4.5  -Tally eis 5.4 -Tally ees 6.3 -Tally ies 7.2 - Tally 8.1 - Tally 9
                                                                                                                      and the Latest  Tally.ERP9
டேலி 4.5
FEATURES: DOS BASED - ACCOUNTS ONLY - (INVENTORY MANAGEMENT  NOT AVAILABLE) 
டேலி 5.4
FEATURES:  WINDOWS BASED - ACCOUNTS WITH INVENTORY 
டேலி 6.3
FEATURES: INTERNET ENABLED - CAN SEND REPORTS FROM TALLY THROUGH MAIL
டேலி 7.2
FEATURES: VAT-TDS-SERVICE TAX 
டேலி 8.1
FEATURES: MULTI- LANGUAGE -EXCISE FOR TRADERS -COMPOSITE VAT -FBT
டேலி 9
FEATURES: PAYROLL -POS
டேலி ERP 9
FEATURES: REMOTE ACCESS -SMS-EXCISE MANUFACTURERS-PAYROLL TAX REPORTS -INCOME TAX
டேலி ERP 9 PRICE 
டேலி ERP 9 SILVER  - Rs.13500.00
டேலி ERP 9 GOLD     - Rs.40500.00
டேலி ERP 9 EDUCATIONAL VERSION - FREE
சரி , அறிமுகம் போதும் , விடயத்திற்கு வருவோமா ?
டேலி மென்பொருள் பயிற்சி 5 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ள்து.
      1.COMPANY CREATION
உங்கள் நிறுவன தகவல்களை(பெயர்,முகவரி,கணக்கு வருடம் முதலியன) டேலி மென்பொருளில் பதிந்து, நிறுவனத்தை உருவாக்கும் செயலே COMPANY CREATION
     2.MASTERS CREATION
உங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள்( CUSTOMERS ),விற்பனையாளர்கள் (SUPPLIERS ) ஆகியன உள்ளடங்கிய பேரேடுயென அழைக்கப்படும் LEDGERS- களை உருவாக்குவது ACCOUNTS MASTER CREATION
உங்கள் நிறுவன சரக்குகள்/பொருட்கள் ( STOCK ITEMS) பொருள் வகைகள் (STOCK GROUP), அளவீடுகள் ( UNITS) ,கிடங்குகள் (GO DOWNS)  இவற்றை உருவாக்குவது INVENTORY MASTERS.
உங்கள் நிறுவன பணியாளர்கள் (EMPLOYEES ),அவர்களின் சம்பள பட்டியல் ஆகிய இவற்றை உருவாக்குவது PAYROLL MASTERS.
    3.VOUCHERS CREATION
உங்கள் நிறுவன விற்பனை(SALES) கொள்முதல்(PURCHASE), செலுத்துதல்(PAYMENT), பெறுதல் (RECEIPT ),வங்கி நடவடிக்கைகள் ( CONTRA) இது போன்ற தினசரி கணக்குகளை டேலியில் பதிவு செய்வதே VOUCHER CREATION.
    4.REPORTS
MASTERS CREATION மற்றும் VOUCHERS CREATION இவற்றை முடித்துவிட்டால் அப்புறமென்ன   
ஐந்தொகை (BALANCE SHEET ) ,இலாப நட்ட கணக்கு (PROFIT & LOSS A/C )   
 இருப்பு நிலைக்குறிப்பு (TRIAL BALANCE ) ,வங்கி புத்தகம் (BANK BOOK ) ,ரொக்க புத்தகம் (CASH BOOK), தின புத்தகம் (DAY BOOK ) என அனைத்தும் தயார். இவற்றை விரிவாக பார்ப்பதை பற்றியும்,அச்சிடுவதையும் அறிவதே இந்நிலை.
    5.ADVANCED FEATURES AND CONFIGURATIONS
டேலி மென்பொருளில் உள்ள (F11 COMPANY FEATURES  AND F12 CONFIGURATION ) இவற்றை பற்றிய விரிவான புரிதலே இந்த பகுதி.
சரி, டேலி மென்பொருள் பயில்வதற்கான முதல் நிலை பாடத்தை பார்த்தோம்.அடுத்த பகுதியில் COMPANY CREATION  பற்றி பார்க்கலாம்.
டேலி மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே சுட்டுக.
http://experts.tallysolutions.com/tallyweb/modules/operation/extranet/CXERPDownloadViewMgr.php#
மேலே உள்ள தளத்தில் இருந்து டேலி மென்பொருள் (INSTALL.exe )  தரவிறக்கம் செய்த பின் உங்கள் கணிணியில் நிறுவுக.                                   
இப்போது உங்கள் கணிணி டேலி மென்பொருளுடன் தயார். படிக்க நீங்கள் தயாரா?.